வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்
குமாரபாளையத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டி உள்ளதால், அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகு வழியாக அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது இந்நிலையில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் வீதி, சின்னப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளான ஜனதா நகர், நாட்டா கவுண்டன்புதூர், பாவடி தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டு சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் ஆகியோர் மீட்டு அரசு ஏற்படுத்தியுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளான் நகராட்சி திருமண மண்டபம், ஐயப்ப சேவா திருமண மண்டபம், ராஜேஸ்வரி திருமண மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் முன்னாள் முதல்வரும் அதிமுக கழக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடை மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைமகள் பாதிக்கப்பட்ட வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1.80 லட்சம் கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டதால் குமாரபாளையம், பவானி, ஈரோடு, பள்ளிபாளையம், கொடுமுடி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிகப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கி உள்ளதாகவும், கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் ஆற்றங்கரையோரத்தில் இருந்து வெளியேற மறுத்த நிலையில், தற்போது மாற்று இடத்திற்கு செல்ல தயராக இருப்பதாக தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனை ஆளும் அரசிடம் வலியுறுத்தி அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சங்ககிரி ஆத்தூர் கெங்கவள்ளி பரமத்தி மற்றும் பணமரத்துப்பட்டி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
Next Story