அனுமதியில்லாத கோவிலுக்கு மக்கள் எதிர்ப்பு

அனுமதியில்லாத கோவிலுக்கு மக்கள் எதிர்ப்பு
மல்லசமுத்திரம் பெரியகொல்லப்பட்டியில் அரசு அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள ஆதிஅங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்தை அகற்றக்கோரி மக்கள் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனுஅளித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் எ.முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது; மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட, பெரியகொல்லப்பட்டி தெற்கு பகுதியில் தனிநபர் ஒருவர், அரசு அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் முறையான கட்டுமான அனுமதி பெறாமல் இஸ்லாமிய மததை்தை சேர்ந்த ஒருவர் ஆதிஅங்காள பரமேஸ்வரி கோவில் ஒன்றை கட்டியுள்ளார். எனவே, இக்கோவில் கூட்டுப்பட்டா நிலப்பகுதியில் வீட்டுமனைப்பிரிவு அமைந்திருப்பதாலும், டவுன் பஞ்சாயத்தில் முறையான அனுமதி பெறாமல் கட்டுமானம் கட்டியிருப்பதாலும், வீடுகட்ட வாங்கிய நிலத்தில் கோவில் கட்டியிருப்பதாலும், மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகம் எச்சரித்தும் தொடர்ந்து பணிகள் செய்துவருவதாலும், இன்றைய இந்துக்கோவில் எதிர்காலத்தில் மசூதியாக மாறிவிட்டால் என்ன செய்வது, வீட்டுமனையில் கோவில் கட்டும்போது மாசான வழிபாடு, பொங்கல் வைக்க இடம், மக்கள்கூட இடம் எங்கே இருக்கிறது? சுவாமிக்கு கோழி, ஆடு, பன்றி என முப்பூசை பலியிட்டு வணங்க அனுமதி தருவார்களா? சிறுதீப்பொறி நாளை மதமோதலாக ஆகிவிட்டால் நினைத்துகூட பார்க்க முடியாது. இஸ்லாமியர் இந்துகொவிலை கட்டியுள்ளதால் ஆச்சார அனுஷ்டானங்களை பின்பற்றி கோவிலை வழிநடத்த முடியாது. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எங்கள் பகுதி மக்கள் இக்கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் கட்டுமானத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என வலிறுத்தி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்., அலுவலகம், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், திருச்செங்கோடு தாசில்தார், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேசன் உள்ளிட்ட அலுவலகளில் மனு அளித்துள்ளோம். இதுசம்மந்தமாக, மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story