கலை இழந்து காணப்பட்ட பள்ளிபாளையம் ஆறு
Komarapalayam (Pallipalayam) King 24x7 |3 Aug 2024 12:45 PM GMT
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆறு கலை இழந்து காணப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுவதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் காவிரி ஆற்றுப்பக்கம் செல்லவோ கூடாது என போலீசாரின் அறிவுறுத்ததால் காவேரி ஆறு கலை இழந்து காணப்பட்டது கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால், மேட்டூர் அணையில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .இதன் காரணமாக பள்ளிப்பாளையம் குமாரபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ,நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் தற்காலிக முகாம்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆடிப்பெருக்கு விசேஷ நாள் என்பதால் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு அதிக அளவு பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால், காவிரி ஆற்றில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றிற்குள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் துணிக்க வைக்கவோ, குளிக்கவோ ,செல்பி எடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக காவிரி ஆற்றுக்கு வருகை தந்த பொதுமக்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் . மேலும் காவிரி ஆற்றில் இருந்து மோட்டார் மூலமாக நீர் எடுக்கப்பட்டு, காவிரி ஆற்றின் ஓரத்தில் தற்காலிகமாக குளிக்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு பொதுமக்கள் புனித நீராடி சென்றனர் . தொடர்ந்து இரவு பகலாக காவிரி கரையோரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story