உப்பிடமங்கலத்தில் கடைக்கு முன் நிறுத்திய டூவீலரை களவாடிய மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு.

உப்பிடமங்கலத்தில் கடைக்கு முன் நிறுத்திய டூவீலரை களவாடிய மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு.
உப்பிடமங்கலத்தில் கடைக்கு முன் நிறுத்திய டூவீலரை களவாடிய மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு. நாமக்கல் மாவட்டம், வடுகப்பட்டி ,பண்ண சாலை பகுதி சேர்ந்தவர் மணிமகன் ரோகித் வயது 21. இவர் யமஹா ஆர்.15 என்ற டூவீலர் வைத்துள்ளார் மேலும், கரூர் மாவட்டம், அரசு காலனி பகுதியில் உள்ள பிரபு மெஸ்சில் சப்ளையர் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூலை 30ஆம் தேதி இரவு 10 மணியளவில், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பிடமங்கலம் பகுதியில் செயல்படும் கோலி சோடா கடை முன்பு தனது டூவீலரை நிறுத்திவிட்டு, கடைக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வந்து திரும்பி பார்த்தபோது, தனது டூ வீலர் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும், எவ்வித தகவலும் கிடைக்காததால், இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் தனது டூவீலரை காணவில்லை புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், களவாடப்பட்ட அந்த வாகனத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் என மதிப்பீடு செய்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, டூ வீலரை களவாடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story