ராமநாதபுரம் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு தனியார் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுகளை பெற்றுள்ளனர். பரமக்குடியில் செயல்படும் சுபம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுபம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மைய நிறுவனர் பாலு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினர்.
Next Story

