சேலம் ஹோலி கிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா
Salem (west) King 24x7 |4 Aug 2024 3:34 AM GMT
மாணவர்கள் பங்கேற்றனர்
சேலம் ஹோலி கிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 4-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமை தாங்கினார். பள்ளியின் மாணவர் தலைவர் உறுதிமொழி ஏற்றவுடன் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக சாய் விளையாட்டு குழுவின் ஓய்வுபெற்ற நிர்வாகி ராஜாராம், ஹோலி கிராஸ் சபையின் புனித ஆந்திரே மாகாணத்தின் தலைவர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 4 வகை அணிகளும், நாட்டு நலப்பணித்திட்ட அணியும், தேசிய மாணவர் படை அணியும், இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கூட்டு உடற்பயிற்சி, இதயத்தை பாதுகாக்கும் எண்ணம் மற்றும் ஆரோக்கியமான உணவு என்பதை மாணவர்கள் தங்களது நாடகத்தின் மூலம் விளக்கினர். மழைநீர் சேமிப்பு குறித்து மழலையர்களும், ஒலிம்பிக் போட்டியை நினைவு கூரும் வகையில் மாணவர்களின் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் அதிக போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் சேசுராஜ், முதல்வர் ஸ்டீபன் ஆனந்தராஜ், நிர்வாகி ஏசுதாசன், மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் அருள்ஜீவன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் விளையாட்டு குழுவினரும் மற்றும் ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
Next Story