டவுன் பஸ் இயக்க கோரிக்கை!
Pudukkottai King 24x7 |4 Aug 2024 5:09 AM GMT
பொது பிரச்சனைகள்
திருமயத்திலிருந்து அறந்தாங்கிக்கு நேரடி பஸ் வசதி கிடையாது. எனவே மக்கள் புதுக்கோட்டை, காரைக்குடி, ராயவரம் சென்று இரு பஸ்கள் மாறி அறந்தாங்கி செல்லவேண்டியுள்ளது. இதனால் பொருட்செலவும், கால விரயமும் ஏற்ப டுகிறது. திருமயத்தில் இருந்து கானாடுகாத்தான். கொத்தமங்கலம், நெடுங்குடி, கீழாநிலைக்கோட்டை வழியாக அறந்தாங்கி 35 கிமீ. தூரம் தான். இந்த வழியில் தார்சாலை வசதியுள்ளது. வழியில் 58 கிராமங்கள் உள்ளன. திருமயம் அதை சுற்றி பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக், பெல் நிறுவனம் ஆகியவை உள்ளன. இவற்றிற்கு ஏராளமானவர்கள் தினசரி வருகின்றனர். எனவே அரசு போக்கு வரத்து கழகம் இந்த வழியில் ஒரு டவுன் பஸ்ஸை விரை வில் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு திருமயம் வட்டார பாஜ தலைவர் முரு கேசன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story