வேலைக்கு சென்ற வாலிபர் தற்கொலை

துயரச் செய்திகள்
கறம்பக்குடி அருகேகோட்டை பட்டினம் தெற்கு புதுக்குடியை சேர்ந்தவர் தூண்டிஅய்யா. இவரது மகன் கணேசமூர்த்தி (20). கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசமூர்த்தியின் சித்தப்பா ஸ்ரீராம் பந்துவாக்கோட்டையிலுள்ள தனது நண்பர் எழிலரசன் மூலம் அவரது உறவினர் ஆத்தங்கரை விடுதி சரவணகுமார் என்பவரிடம் மைக் செட் வேலை பார்ப்பதற்காக அனுப்பி வைத்துள்ளார்.அவரது வீட்டில் தங்கி வேலை பார்த்த கணேசமூர்த்தி சரவணகுமார் உறவினர் மகளை போட்டோ எடுத்து பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சரவணகுமார் கணேசமூர்த்தியை எழிலரசன் வீட்டில் 2 தினங்களுக்கு முன்பு கொண்டு வந்து விட்டுவிட்டு ஸ்ரீராமுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த கணேசமூர்த்தியை நேற்று வரை காணவில்லை. அக்கம் பக்கத்தினர் தேடி வந்தநிலையில் வீரசெல்வம் - என்பவரின் கொட்டகையில் இடது கையை அறுத்துக் கொண்ட கணேசமூர்த்தி சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீசார் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story