மஹாளய அமாவாசை முன்னிட்டு மாயனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

மஹாளய அமாவாசை முன்னிட்டு மாயனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
மஹாளய அமாவாசை முன்னிட்டு மாயனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம். இந்து சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மறைந்த அவர்களது முன்னோர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் வருடந்தோறும் தர்ப்பணம் செய்வது வழக்கம். குறிப்பாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது இயல்பான நிலை என்றாலும் கூட வருடத்தில் புரட்டாசி,தை, ஆடி என மூன்று அமாவாசைகள் மட்டும் மஹாலய அமாவாசை என்று கருதப்படுவதால், இந்த நாட்களில் நீர்நிலைகளுக்கு சென்று தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடைவதோடு, அவரவர் குடும்பமும் செழிப்படையும் என்ற ஐதீகம் உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், மாயனூர் காவிரி ஆற்றின் அருகிலேயே செல்லும் பாசன வாய்க்கால் பகுதியில் இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
Next Story