தொக்குப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நடந்த சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

தொக்குப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நடந்த சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
தொக்குப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நடந்த சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தொக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 65. இவர் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 7 மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தொக்குப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற அவர் மீது, அதே தொக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற தங்கவேல் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த தங்கவேலுவை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கவேலின் சகோதரி வீராயி வயது 52 என்பவர் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.
Next Story