பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி அமாவாசை பூஜை.

X
Paramathi Velur King 24x7 |4 Aug 2024 8:24 PM ISTபரமத்தி வேலூர் அடுத்துள்ள பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு முன்னதாக அம்மனுக்கு பால்,தயிர்,பஞ்சாமிர்தம், மஞ்சள்,திருமஞ்சள்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயில் குடிப்பாட்டு மக்கள்,ஊர் பொதுமக்கள் சுற்றுவட்டாரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story
