ஆடி அமாவாசை சங்ககிரி சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி அமாவாசை சங்ககிரி சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
சங்ககிரி: ஆடி அமாவாசை சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, திரளான பத்திரங்கள் தரிசனம்...
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சமனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். வி.என்.பாளையம் ஸ்ரீ கணபதி சக்தி மகளிர் குழுவின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story