வெள்ளகோவிலில் தூக்கு போட்டு டிரைவர் தற்கொலை
Kangeyam King 24x7 |5 Aug 2024 2:45 AM GMT
வெள்ளக்கோவிலில் மது குடிப்பதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை. கணவன் தூக்கு போட்டு தற்கொலை. வெள்ளகோவில் காவல்துறை விசாரணை
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28 ) . இவர் தனது குடும்பத்துடன் வெள்ளகோவில் கே.பி.சி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தின இரவு விக்னேஷ் மது குடித்து விட்டு வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் படுத்து தூங்கிவிட்டனர். அதன் பின்னர் இரவு விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story