திமுகவுடன் ஆன கூட்டணியை நாங்கள் மதிக்கிறோம் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம்!

திமுகவுடன் ஆன கூட்டணியை நாங்கள் மதிக்கிறோம் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம்!
அரசியல் செய்திகள்
திமுகவுடனான கூட்டணியை நாங்கள் மதிக்கிறோம் என்றார் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம். பொன்னமராவதி அருகேயுள்ள மூலங்குடி பொய்சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபட வந்த அவர் மேலும் கூறியது: காங்கிரஸ் கட்சியின் உயரமும் தெரியும் அதன் பலமும் தெரியும். திமுக கூட்டணியை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். கூட்டணியின் மூலம் தான் காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்.இந்தாண்டு சிறப்பாக மழை பெய்துள்ளதால் கர்நாடகம், மற்றும் தமிழ்நாட்டுக்குத் தேவையான நீர் கண்டிப்பாகக் கிடைக்கும். அதன் பின்னர் கருத்து வேறுபாடு இருந்தால் அதை காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். அவர்கள் சொல்லும் தீர்ப்பில் நமக்குத் திருப்தி இல்லையென்றால் உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாம் என்றார் அவர்.பேட்டியின்போது திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், வட்டாரத் தலைவர் வி. கிரிதரன், நகரத் தலைவர் எஸ். பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story