அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக அவசர மருத்துவ தினம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக அவசர மருத்துவ தினம்
மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
அவசர மருத்துவ முறைகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக அவசர மருத்துவ தினம் மற்றும் அவசர சிகிச்சை மருத்துவ சேவை வாரமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். விம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மீனாட்சிசுந்தரம், விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் தலைவரும், துணை மருத்துவ இயக்குனருமான அசோக் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வெளிநாடுகளில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் துறையின் முன்னாள் மாணவர்கள் சரவணன், லட்சுமி ஆகியோர் வெளிநாடுகளில் அவசர சிகிச்சை சேவை பிரிவு, வேலைவாய்ப்புகள் குறித்து பேசினர். தொடர்ந்து மாணவர்களின் சார்பில் கல்லூரி வாசலில் கல்லூரி டிஜிட்டல் பெயர் பலகை நிறுவப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், துறையில் சிறப்பா செயல்பட்டு வரும் மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துறையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பாளர் அஜித்குமார், உதவி பேராசிரியர்கள் அருண்குமார், ஜெகன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story