பாஜக சார்பில் பொதுக்கூட்டம்

X
திருக்கோவிலுாரில் பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. பஸ் நிலையம் அருகே நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முரளி வரவேற்றார். நகர தலைவர் பத்ரி நாராயணன் துவக்க உரையாற்றினார். ஒன்றிய தலைவர்கள் செல்வகுமார், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் குமாரசாமி, தரவு மேலாண்மை பிரிவு மாநிலச் செயலாளர் கார்த்திகேயன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் வசந்தன், மகளிர் அணி தலைவி பத்மா பழனி, மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் நன்றி கூறினார்.
Next Story

