முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்
கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள் நாளை மறுநாள் (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு வாழப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து, வாழப்பாடி கட்சி அலுவலகமான மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வரை அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் அங்கு உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த அமைதி ஊர்வலத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வார்டுகளில் உள்ள ஏழை, எளிய பொது மக்கள், ஆதரவற்றோர், முதியோர்களுக்கு நல உதவிகள் வழங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் வீட்டு முன்பு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story