பணம் பறிக்கும் நோக்கோடு செயல்பட்ட மின்வாரிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.
Karur King 24x7 |5 Aug 2024 10:54 AM GMT
பணம் பறிக்கும் நோக்கோடு செயல்பட்ட மின்வாரிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பணம் பறிக்கும் நோக்கோடு செயல்பட்ட மின்வாரிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சேர்வைக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் பிரசாந்த். இவர் அருகிலுள்ள டி.இடையப்பட்டி, சுக்காம்பட்டி, ஆலந்தூர், புங்கம்பாடி, பூஞ்சோலைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 13 வருடங்களாக அரசு கேபிள் டிவி தொழில் நடத்தி வந்தார். இதற்காக ஆலந்தூரில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து தொழில் தொடர்பான உபகரணங்களை அதில் வைத்து செயல்படுத்தி வந்தார். மேலும்,அந்த கடைக்கு உரிய மின் கட்டணத்தையும் செலுத்தி வந்தார். இதனிடையே, கடந்த 2023 ஆம் ஆண்டு பாலவிடுதி துணை மின் நிலையத்தில் பணியாற்றும் ஆர் எஸ் ஆனந்த் என்பவர், கடையில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். கடை உரிமையாளர் தானே கட்ட வேண்டும் என டேனியல் பிரசாத் கேள்வி எழுப்பினார். ஆனால், வாடகைக்கு இருக்கும் நபர்தான் கட்ட வேண்டும் என ஆனந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரிடம், ஆனந்த் மேற்கொண்ட செயல்கள் குறித்து மனுவாக அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார். இது குறித்து டேனியல் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, கடந்தாண்டு ஆர் எஸ் ஆனந்த் டேனியல் பிரசாத்தை சந்தித்து கேபிள் ஒயர்களை மின்வாரியத்துக்கு சொந்தமான கம்பங்களில் கட்டி பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும், அப்படி பயன்படுத்துவதென்றால் தனியாக எனக்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியதை ஏற்க மறுத்ததால், இவ்வாறு அந்த அதிகாரி நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
Next Story