நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த, கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ். ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார். மனு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி அவர்களை, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை முருகன், அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி தேர்தலில் தரக்குறைவாக விமர்சித்து பேசினார். இதனால் தமிழக அரசு அவரை கைது செய்தது. இதுகுறித்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதே வார்த்தைகளை பயன்படுத்தி நான் பேசியிருக்கிறேன் முடிந்தால் என்னை கைது செய்து பார் என தெரிவித்து இருந்தார்? ஆயினும் தமிழக அரசு பொறுமையாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் மறைந்த கருணாநிதியை விமர்சித்து சீமான் காணொளி ஒன்றை வெளியிட்டு இருப்பது மேற்கோள் காட்டி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளதாகவும், மனுவின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும், நடவடிக்கை எடுக்க தவறினால் தானே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story