வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சாராயம் கடத்தி வந்த மினி பேருந்து ஓட்டுநர் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில்  சாராயம் கடத்தி வந்த மினி பேருந்து ஓட்டுநர் கைது
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்த மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்த மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்தும், மினி பேருந்தை பறிமுதல் செய்து வாணியம்பாடி நகர போலீஸார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியான தேவராஜபுரம், வீரணமலை ஆகிய மலை கிராமங்களுக்கு வாணியம்பாடியில் இருந்து தினந்தோறும் மினி பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில், தமிழக-ஆந்திர மாநில எல்லையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதனை மினி பேருந்து மூலம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விற்கப்பட்டடு வருவதால் அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சுங்க சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில், வாணியம்பாடி நகர காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் மினி பேருந்து சோதனை மேற்க்கொண்ட போது, தனியார் மினி பேருந்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து நகர காவல் துறையினர் தனியார் மினிபேருந்தை பறிமுதல் செய்து மினி பேருந்து ஓட்டுநர் ஆரிமணி பெண்டா பகுதியை சேர்ந்த ஏமாந்திரி(24), நடத்துனர் சோபன் பாபு (42) ஆகிய 2 பேர் கைது செய்தும், அவர்களிடமிருந்த 30 சாராய பாக்கெட்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Next Story