வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
Perambalur King 24x7 |5 Aug 2024 1:01 PM GMT
வழிப்பறி வழக்கு
மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலிண்டபுரம் கிராம பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மங்களமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் மங்களமேடு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்டையினர் சின்னாறு பகுதியில் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பெரம்பலூர் சங்குப்பேட்டை பிரகாஷ் (30) என்பவர் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்த காவல் ஆய்வாளரை கண்டதும் தப்பிக்க முயன்று சின்னாறு பாலத்திலிருந்து குதித்தபோது காயம் ஏற்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இடது காலில் எலும்பு முறிவும் வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பிரகாஷை விசாரித்த போது வாலிகண்டபுரம் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தான்தான் எனவும் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்கவே பாலத்தில் இருந்து குதித்ததாகவும் கூறினார். பின்னர் வழிப்பறி குற்ற வழக்கில் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் ஆய்வாளர் பாலாஜி நீதிமன்ற உத்தரவின்படி குற்றவாளியை இன்று (05.08.2024) நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
Next Story