சிவசக்தி நகர் அருகே டூ வீலர்கள் மோதல் இளைஞர் உயிரிழப்பு. குழந்தை மற்றும் வாலிபர் படுகாயம்.
Karur King 24x7 |5 Aug 2024 1:29 PM GMT
சிவசக்தி நகர் அருகே டூ வீலர்கள் மோதல் இளைஞர் உயிரிழப்பு. குழந்தை மற்றும் வாலிபர் படுகாயம்.
சிவசக்தி நகர் அருகே டூ வீலர்கள் மோதல் இளைஞர் உயிரிழப்பு. குழந்தை மற்றும் வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, பூங்கா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் மகன் பார்த்திபன் வயது 22. இவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூரில் இருந்து குஜிலியம்பாறை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தாந்தோணிமலை சிவசக்தி நகர் டெல்லி ஸ்வீட் எதிரே சென்றபோது, அதே சாலையில் இவருக்கு முன்பாக கரூர், திருக்காம்புலியூர், எல் என் எஸ் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் குமார் வயது 34 என்பவர் அவரது ஒன்றரை வயது மகளுடன் டூவீலரில் வேகமாக சென்றவர், திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், டூவீலரை வலது புறம் திருப்பியதால், பின்னால் வந்த பார்த்திபன் டூவீலர் ராஜேஷ் குமார் டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர்களில் பயணித்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொரு டூவீலரில் வந்த ராஜேஷ்குமார் மற்றும் அவரது ஒன்றரை வயது மகள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டதால், இருவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அறிந்த பார்த்திபனின் தாயார் ரோஸி வயது 41 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிர் இழந்த பார்த்திபன் உடலை உடற்கூர் ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, டூவீலரை கவனக் குறைவாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story