பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை
Periyakulam King 24x7 |5 Aug 2024 2:18 PM GMT
மழை
தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள முருகமலை, கும்பக்கரை, எ.புதுப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம், தெ.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான கன மழை பெய்த நிலையில், தற்போது மிதமான சாரல் மழை வருகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு பின்பு பெய்த இந்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story