காங்கேயம் அருகே மரம் நடும் விழாவிற்கு வந்த செய்தித்துறை அமைச்சரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் - பரபரப்பு 

காங்கேயம் ஒரத்துப்பாளையம் அணையில் தனியார் அமைப்பின் சார்பில் 800 ஏக்கர் பரப்பளவில் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கியது. மேடையில் சிறப்புரையாற்றி விழா முடியும் தருவாயில் 10க்கு மேற்பட்ட விவசாயிகள் செய்தித்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஒரத்துப்பாளையம் அணையில் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் 800 ஏக்கர் பரப்பளவில்  2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்தவராஜ் தலைமையில் நடைபெற்றது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்த சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி பின்னர் அந்த இடத்தில் மண் ஆய்வு செய்யப்பட்டு நாட்டு மரங்கள், பழவகை மரங்கள் நட்டு பராமரிப்பு பணிகளில் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் காங்கேயம் துளிகள் அமைப்பை சேர்ந்த  தன்னார்வலர்கள்   அமைப்பினர் ஈடுபட சிறப்பாக பணிகள் நடைபெறும் என தெரிவித்தனர். அதன் துவக்க விழா இன்று தொடங்கியது. விழா தொடங்கும் முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். பின்னர் விழா மேடையில் சிறப்புரை ஆற்றினார். பின்னர் விழா முடிவடைந்து கலைந்து செல்லும் நிலையில் திடீரென 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 30 ஆண்டு காலமாக இந்த அணையில் சாயக்கழிவு கலந்த தண்ணீர்,கெட்டுப்போன தண்ணீரை தேக்கி வைக்கப்பட்டு பின்னர் வெளியேற்றப்படும் என்ற  நிலையில் தற்போது மழை காலம் என்பதால் நல்லதண்ணீர் வரும்பொழுது இப்படி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க போவதாக கூறுவது எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் கால்நடைகள் வளர்ப்பில் தோய்வு ஏற்படுவதாகவும், மேலும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் போய்விடும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த அணையின் மீது வழக்கு உள்ளதாக எப்போது பார்த்தாலும் இந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். கூட்டத்திலிருந்து அமைச்சர் கிளம்பிச் செல்லும் போது கார் வரை முற்றுகீட்டுத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதனால் ஒரத்தபாளையம் அணை பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story