கழிவு நீர் கால்வாயினால் ஏற்படும் விபத்துக்கள்..!
Namakkal (Off) King 24x7 |6 Aug 2024 3:05 AM GMT
கழிவு நீர் கால்வாயினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர் மலையில் மக்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள அண்ணாநகர் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது இந்த கால்வாயில் செல்லும் கழிவு கழிவுநீர் ஆனது வெளியில் செல்லாமல் அப்படியே தேங்கிநின்று விடுகிறது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி கொசு தொல்லைகள் பொது மக்களுக்கு நோய்கள் ஏற்படுகிறது கழிவுநீர் பைப் லைன் சரி செய்வதற்கு குழி தோண்டி ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் சரி செய்து மூடாமல் இருக்கிறது அந்த இடத்தில் விபத்துகள் ஏற்படுகிறது புதிதாக கட்டிய இந்தக் கழிவு நீர் கால்வாய் மூடப்பட்டுள்ள கான்க்ரீட் சாய்வாக இல்லாமல் உயரத்தில் உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர். உயரத்தில் போடப்பட்ட கான்கிரட்டை தாழ்வாக அமைத்துக் கொடுக்குமாறு ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜிடம் கேட்டபோது அப்படியெல்லாம் சரி செய்து கொடுக்க முடியாது நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் எனக்கு ஒன்றும் பயமில்லை என பொதுமக்களை மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விபத்துகள் ஏற்படாமல் இருக்க இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்குகழிவுநீர் கால்வாய்ணைசரி செய்து கொடுக்குமாறும் ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story