ஆலைக்கு மீன் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு!

ஆலைக்கு மீன் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு!
பொட்டலூரணி கிராமத்தில் ஆலைக்கு மீன் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி 3 மீன் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியாகும் துா்நாற்றம், கழிவுநீரால் தாங்கள் பாதிக்கப்படுவதால் அந்த ஆலைகளை அகற்ற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ஆலைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் ஏற்றி வந்த லாரியை அப்பகுதியினா் சிறைபிடித்தனா்; ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாகவும், அதிவேகமாக லாரியை இயக்கியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். அதையடுத்து, திங்கள்கிழமை மாலை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடும்வரை போராட்டம் தொடரும் என, அவா்கள் தெரிவித்தனா்..
Next Story