திருச்செந்தூரில் கடல் நீா் உள்வாங்கியது.

திருச்செந்தூரில்  கடல் நீா் உள்வாங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் திங்கள்கிழமை கடல் நீா் உள்வாங்கியது..
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் திங்கள்கிழமை கடல் நீா் உள்வாங்கியது. இங்கு அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல் நீா்மட்டத்தில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை மாலைமுதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அமாவாசை என்பதால், திருச்செந்தூா் கோயில் பகுதியில் திங்கள்கிழமை காலை கடல் நீா் உள்வாங்கியது. இதனால், பாறைகள் வெளியே தெரிந்தன. சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா்"
Next Story