வெள்ளகோவில் அரசு மருத்துவரிடம் தகராறு செய்த இளைஞர் கைது
Kangeyam King 24x7 |6 Aug 2024 3:37 AM GMT
வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரிடம் தகராறு செய்த வாலிபர் கைது
வெள்ளகோவில் தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையம் உள்ளது. வெள்ளகோவில் காங்கேயம் சாலை அழகாபுரி நகரை சேர்ந்த முகமது அம்ருதீன் (வயது 23) என்பவர் மது போதையில் தனது இடது கையில் காயங்களுடன் நேற்று முன்தினம் மாலை சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதை ஏற்காத அம்ருதீன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மருத்துவப் பணியாளர்களை கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும் நோயாளிகளையும் விரட்டினார். இது தொடர்பாக சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோயில் காவல்துறை வழக்கு பதிவு செய்து முகமது அம்ருதீனை கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story