ஸ்ரீ கள்ளழகர்,ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு விழா!

பக்தி
மாவடி கோட்டை கிராமத்தில்அமைந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ கள்ளழகர்,ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் அருகே உள்ள மாவடி கோட்டை கிராமத்தில் ஆடி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டுஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பிகை,ஸ்ரீ கள்ளழகர் அய்யனார்,ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று புரவி எடுப்பு விழா நடைபெற்றது. ஏற்கனவே ஆவுடையார் கோவில் அருகே காராகுடி என்ற இடத்தில் மண்ணால் ஆன குதிரைகள், காளைகள், மதலை, போன்றவற்றை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து மாவடி கோட்டை கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு அந்தமண்ணால் ஆன சிலைகளை இன்று மாலை அணிவித்து பல்வேறு பூஜைகள் செய்து பூசாரிகள் மற்றும் சாமி அடிகலுடைய ஆட்டத்தோடு சுமார் 20க்கும் மேற்பட்ட குதிரைகள், காளைகள் மற்றும் மதலைகளை தோள்களில் சுமந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளஸ்ரீ கள்ளழகர் அய்யனார் கோயிலில் இறக்கி வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிகழ்வு காண்போரை பரவசப்படுத்தியது.
Next Story