பயணிகளை பாதி வழியில் இறக்கி விடும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை தேவை!

பயணிகளை பாதி வழியில் இறக்கி விடும்  நடத்துனர்கள்  மீது நடவடிக்கை தேவை!
பொது பிரச்சனைகள்
பொன்னமராவதியில் பேருந்து நிலையத்துக்கு வரும்முன்பாகவே பணிமனை செல்லும்பொருட்டு பாதி வழியில் பயணிகளை இறக்கிவிடும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் துவரங்குறிச்சி, சிங்கம்புணரி உள்ளிட்ட ஊர்களுக்கு நகர அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் வரும் பயணிகளை சில நேரங்களில் பேருந்துநிலையத்துக்கு உள்ள அமரகண்டான் தென்கிழக்கு கரை அருகே திருப்பத்தூர் சாலைப் பகுதியில் இறக்கிவிடுவதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே நகர அரசுப் பேருந்துகள் பேருந்துநிலையத்துக்குவந்து பயணிகளை இறக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
Next Story