ஓய்வூதியர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!.
Thoothukudi King 24x7 |6 Aug 2024 6:23 AM GMT
தமிழக அரசின் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய கோரி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசின் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய கோரி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர்களின் மனுக்கள் மீது காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும், ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்ட செலவுத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும், காசில்லா மருத்துவம் என்ற நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும், 31/7/2024 வரை தேங்கியுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் ,தமிழக அரசு மருத்துவ காப்பீடூ திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் மெத்தனமாக செயல்படும் கருவூல கணக்கு துறை ஆணையரை கண்டித்தும் தமிழக முழுவதும் தமிழக அரசின் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி தூத்துக்குடியில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் ஏராளமான ஓய்வு உயிர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Next Story