சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள்
Sivagangai King 24x7 |6 Aug 2024 6:25 AM GMT
சிவகங்கை மாவட்டம், சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடிட ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு, சுதந்திர தினவிழாவினை கண்டு களித்திட வருகை தருகின்ற பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துகழுவன், வருவாய் கோட்டாட்சியர்கள் பால்துரை (தேவகோட்டை), விஜயகுமார் (சிவகங்கை) உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story