வேளாண் இடுபொருட்களை மானியத்தில் பெறலாம் உதவி இயக்குனர் தகவல்
Sivagangai King 24x7 |6 Aug 2024 6:37 AM GMT
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வேளாண் விரிவாக்க மையத்தில் இடுப்பொருட்களை மானியத்தில் பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் உரங்கள் இருப்பு உள்ளதாகவும் அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி விதைப்பு செய்வதற்கு ஏதுவாக சிவகங்கை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் மதகுபட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் JGL1798, NLR 34449, C051 ஆகிய நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்களான அசோஸ்பைரில்லம் (நெல்), 50% மானியத்தில் திரவ உயிர் அசோஸ்பைரில்லம் (இதரம்), பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் உயிர் கட்டுப்பாட்டு காரணிகளான விரிடி, சூடோமோனாஸ் மற்றும் நெல் நுண்ணுாட்டம், பயறு நுண்ணுாட்டம், சிறுதானிய நுண்ணுணூட்டம், நிலக்கடலை நுண்ணுாட்டம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடுபொருட்களை மானியத்தில் பெற்று பயனடையுமாறு சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Next Story