ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைப்பு. ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் சற்று முன் அறிவிப்பு.
Karur King 24x7 |6 Aug 2024 8:56 AM GMT
ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைப்பு. ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் சற்று முன் அறிவிப்பு.
ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைப்பு. ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் சற்று முன் அறிவிப்பு. கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள, சேலம் - மல்லூர் இடையே, சேலம் - நாமக்கல் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மாலை 2 ரயில் சேவைகள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம், தெற்கு ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 1. ரயில் எண்.06837 சேலம் - கரூர் ரயில் 06.08.2024, சேலத்தில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட இருந்த ரயில் 1 மணி நேரம் தாமதமாக - இரவு 07.00 மணிக்கு புறப்படும் என்றும், 2. ரயில் எண்.06838 கரூர்-சேலம் ரயில் 06.08.2024, கரூர் ஜங்சனிலிருந்து இரவு 07.55 மணிக்குப் புறப்பட இருந்த ரயில், 1 மணி நேரம் தாமதமாக - இரவு 08.55 மணிக்குப் புறப்படும் என தெரிவித்துள்ளார். எனவே மேலே கண்ட ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்கள் பயண நேரத்தை தெரிந்து கொள்ளுமாறும், அதற்கேற்ற வகையில் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story