ஆண்டிபட்டி கோட்டையில் ஓய்வு எடுக்க சென்றவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |6 Aug 2024 9:48 AM GMT
ஆண்டிபட்டி கோட்டையில் ஓய்வு எடுக்க சென்றவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
ஆண்டிபட்டி கோட்டையில் ஓய்வு எடுக்க சென்றவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, புஞ்சை காளக்குறிச்சி அருகே உள்ள வெங்ககக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 50. இவர் கரூர் மாவட்டம், ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் செயல்படும் அட்சயா ஹோட்டலில் கேஷியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நேத்ராவதி டெக்ஸ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி இரவு 10 மணியளவில் பணி முடித்துவிட்டு ஓய்வுக்கு சென்றார் ரவிச்சந்திரன். மறுநாள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 7 மணி அளவில் உறங்கிக் கொண்டு இருந்த இடத்தில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார் ரவிச்சந்திரன். ஹோட்டலில் பணியாற்றும் சக ஊழியர்கள் இது தொடர்பாக ரவிச்சந்திரன் மனைவி நேத்ராவதிக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த நேத்ராவதி அதிர்ச்சடைந்தார். மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், இறந்த ரவிச்சந்திரன் உடலை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story