கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியில் மன்ற அமைப்புகளின் தொடக்கவிழா
Tiruchengode King 24x7 |6 Aug 2024 11:13 AM GMT
கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியில் மன்ற அமைப்புகளின் தொடக்கவிழா
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மன்றங்களின் தொடக்கவிழா நடைப்பெற்றது. இவ்விழா கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. ஆர். சீனிவாசன் அவர்கள் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்வி நிறுவனங்களின் தலைமை திட்ட நோக்க அதிகாரி முனைவர் எஸ். பாலுசாமி அவர்கள் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர், இயக்குனர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதுகலை இயற்பியல் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி சாருமதி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் ஆல் இந்தியா ரேடியோவின் நிகழ்ச்சி தொகுப்பாளர். திரு. எ பிரபுகுமார் அவர்கள் கலந்துகொண்டு, யார் என்ன சொன்னாலும் இலக்கை நோக்கி பயணிப்பதை குறிக்கோளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வாழ்வில் சாதிக்க வேண்டும் எனில் நம்மில் உள்ள பயத்தை எவ்வாறு போக்க வேண்டும் என்பது குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும் மன்றங்களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் கலந்துகொண்டு நாட்டுநலப்பணித் திட்டம்(NSS), தேசிய மாணவர் படை(NCC), இந்திய செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டரி சங்கம், மகாத்மா காந்தி சிந்தனையாளர்கள் சங்கம், காந்தி சிந்தனை மன்றம், வள்ளுவர் வாசகர் வட்டம், நுண்கலை மன்றம், இளம் இந்தியா அமைப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம் போன்ற மன்றங்களை துவங்கி வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக வணிக நிர்வாகவியல் துறையைச் சார்ந்த மாணவி எஸ். மஞ்சுளா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். விழா இனிதே நிறைவடைந்தது.
Next Story