முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா

முனியப்பன் கோவிலில்  ஆடித்திருவிழா
குமாரபாளையம் முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக நன்மை வேண்டி யாக வேள்வி நடத்தப்பட்டது. இதனை பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார், பவானி, பழனியாண்டவர் கோயில் அர்ச்சகர் ஸ்த்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார் நடத்தினர். கோவிலில் உள்ள ராஜகணபதி, முனியப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு பவானி சங்கமேஸ்வரர் கோவில் முக்கூடலிலிருந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.
Next Story