கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை!. போலிசார் விசாரணை.
Tirupathur King 24x7 |7 Aug 2024 2:18 AM GMT
ஜோலார்பேட்டை அருகே கணவர் இறந்த பின்பு கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை!. போலிசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவர் இறந்த பின்பு கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை!. போலிசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் கற்பகம் (42) இவரது மகள் சுபிக்ஷா (17). இவரது கணவர் குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இவரது மனைவி கற்பகத்தையும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ததால் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் உள்ள வாடகைக்கு வீட்டுக்கு சென்ற கற்பகம் மற்றும் அவரது மகள் சுபிக்ஷா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 12ம் வகுப்பு முடித்துள்ள சுபிக்ஷா மற்றும் அவரது தாயார் கற்பகம் ஆகிய இருவரும் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடன் கேட்டு வந்த நபர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் கற்பகம் மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கதிலும், கடன் பிரச்சனை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இது போன்ற விபரீத முடிவு எடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story