ஆம்பூர் அருகே தோல் குடோனில் தீ விபத்து

ஆம்பூர்  அருகே  தோல்  குடோனில் தீ விபத்து
ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலை தோல் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டி தேக்கி வைக்கும் குடோனில் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலை தோல் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டி தேக்கி வைக்கும் குடோனில் தீ விபத்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா ?அல்லது வருமான வரித்துறை காண்பிப்பதற்காக நிர்வாகமே தீ விபத்தை ஏற்படுத்தினரா? என போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், ஜமீன் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வரும் (சாரா ஷுஸ்) தனியார் காலனி தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று பணி முடிந்து தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் இரவு நேரத்தில் காலனி தொழிற்சாலையில் தோல் கழிவுகள் மற்றும் அட்டை பெட்டிகள் தேக்கி வைக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொட்டும் மழையிலும் தீ மளமளவென என பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டதால் தீயை அனைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு பின்னர் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கொட்டும் மழையிலும் தீ பரவலாக பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலனி மற்றும் தோல் தொழிற்சாலைகளில் அடிக்கடி தோல் கழிவு தேக்கி வைக்கும் குடோன்களில் இது போன்ற தீ விபத்து தொடர்வதால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படுகின்றதா ?அல்லது வருமான வரித்துறை காண்பிப்பதற்காக தொழிற்சாலை நிர்வாகமே தீ விபத்தை ஏற்படுத்தினரா? என ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story