உலகங்காத்தான் ஏரிக்கு வாய்க்கால் அமைக்க விவசாயிகள் மனு
Thirukoilure King 24x7 |7 Aug 2024 3:42 AM GMT
மனு
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான், பொற்படாக்குறிச்சி, இந்திலி, காட்டனந்தல், எரவார் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: உலகங்காத்தான் ஊராட்சியில் உள்ள ஏரி நீர்பாசன வசதியில்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விளைநில பயிர்கள் கருகுகின்றன. மேலும், குடிநீர் வசதியின்றி பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். உலகங்காத்தான் ஊராட்சிக்கு மிகவும் அருகாமையில் உள்ள குதிரைச்சந்தல் ஏரிக்கு கோமுகி அணை தண்ணீர் வருகிறது. எனவே, குதிரைச்சந்தல் ஏரி கோடியில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் வாய்க்கால் அமைப்பதன் மூலம் உலகங்காத்தான் ஏரிக்கு நீர்வரத்து ஏற்படும். உலகங்காத்தான் ஏரி நிரம்பும் பட்சத்தில் அங்கிருந்து வாய்க்கால் மூலம் இந்திலி, பொற்படாக்குறிச்சி, எரவார், காட்டனந்தல், லட்சியம் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இதனால் உபரி நீர் வீணாகாமல் இருக்கும். எனவே, குதிரைச்சந்தல் ஏரியில் இருந்து உலகங்காத்தான் ஏரி வரை 800 மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story