தலைமையாசிரியர் நியமிக்க கோரி போராட்டம் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை!

தலைமையாசிரியர் நியமிக்க கோரி போராட்டம் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை!
போராட்டச் செய்திகள்
பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி பொதுமக்கள் அறிவித்திருந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. அஞ்சுபுளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 45 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வந்தனர். தலைமையாசிரியர் பணிமாறு பெற்று சென்றுவிட்டார். உதவி ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வந்தனர். தலைமையாசிரியர் பணிமாறுதல் பெற்று சென்றுவிட்டார். உதவி ஆசிரியர் மட்டும் பணியில் இருந்தார். இந்நிலையில் உதவி ஆசிரியரும் மகப்பேறு விடுப்பு எடுத்து தொடர் விடுமுறையில் செல்ல உள்ள நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக நிரந்தரமாக ஆசிரியடை நியமிக்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட பெற்றோர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் முடிவு செய்திருந்தனர்.இதையறிந்து வந்த வட்டாரக்கல்வி அலுவலர் ராமதிலகம் மற்றும் பொன்னமராவதி போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விரைவில் நிரந்தரமாக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை பெற்றோர் வாபஸ் பெற்றனர்.
Next Story