பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

15வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேலு, 9வது வார்டு பாமக கவுன்சிலர் ராஜேஷ் ஆதரவுடன் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த மகாதேவன் தேர்வு . திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
15வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேலு, 9வது வார்டு பாமக கவுன்சிலர் ராஜேஷ் ஆதரவுடன் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த மகாதேவன் தேர்வு . திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசை தேர்வு நிலை பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக அதிமுக மதிமுக ஆதரவுடன் போட்டியின்றி திமுக வேட்பாளர் மகாதேவன் வெற்றி பெற்றார் . அவருக்கு முன்னாள் அமைச்சர் சாமு நாசர் பூவிருந்தவல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி திமுகவினர் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர் அப்பொழுது தீப்பொறி பட்டு பேரூராட்சி முன்பிருந்த வீட்டில் வாயிலில் கட்டி இருந்த ஸ்கிரீன் துணி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக அருகில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் துணியில் பிடித்த தீயை அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 6 வார்டுகளை அதிமுகவும், 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. தலா ஒரு வார்டில் மதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த வடிவேலு பேரூராட்சி தலைவராகவும், மகாதேவன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த மே மாதம் பேரூராட்சி தலைவர் வடிவேல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் துணைத் தலைவர் மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இன்று திருமழிசை பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பூந்தமல்லி வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் மேற்பார்வையில் பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசன் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தினார். இதில், திமுகவைச் சேர்ந்த மகாதேவன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் மற்றும் ஒரு சுயேச்சை உள்பட 6 பேர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் திமுக மற்றும் மதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேலு, 9வது வார்டு பாமக கவுன்சிலர் ராஜேஷ் ஆதரவுடன் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story