பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு
செட்டிக்குளம் மற்றும் சிறுவாச்சூர் கிராம பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவ உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஜென்னட் ஜெசிந்தா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து, சித்ரா ஆகியோர்கள் இணைந்து செட்டிக்குளம் மற்றும் சிறுவாச்சூர் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தன் பிள்ளைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினர்.
Next Story