கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா!
Thoothukudi King 24x7 |7 Aug 2024 6:08 AM GMT
கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. நாடு முழுவதும் வருடந்தோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதர கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட அவார்டு சேர்மன் விநாயகா ரமேஷ், உறைவிட மருத்துவர் சுதா,குழந்தைகள் நல மருத்துவர் துரை பத்மநாபன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவர் அனுஜா ஜஸ்டின் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி உலக தாய்ப்பால்வாரவிழா குறித்து நோக்கவுரையாற்றினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் புளோரோ நெல்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்மார்களுக்கு சிறுதானிய உணவு பெட்டகம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். இதில் மருத்துவர்கள் ஜெய செல்வராணி,மோகனசுந்தரம்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன். கிருஷ்ணசாமி, பாபு, ரவிமாணிக்கம், நடராஜன், மாரியப்பன், நாராயணசாமி, கருப்பசாமி உள்பட தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்..
Next Story