தமிழக முன்னாள் முதலமைச்சர் நினைவு தினம் அனுசரிப்பு....

சங்ககிரி: பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...
சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து தலைமையில் பிரமாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரம், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் நிர்மலா,ஒன்றிய செயலாளர் ராஜேஷ், பேரூர் திமுக செயலாளர் முருகன் மாவட்டத் பேரூர் அவைத் தலைவர் அத்தியண்ணன், சங்ககிரி பேரூராட்சி மன்றத் தலைவர் தலைவர் மணிமொழி முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் பிரபு, பேரூர் துணை செயலாளர் ஸ்டிக்கர் ரமேஷ் பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story