ஏலகிரி மலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
Tirupathur King 24x7 |7 Aug 2024 7:40 AM GMT
ஏலகிரி மலையில் காதலித்து வந்த பெண்ணை தாய்மாமன் மகனுக்கு தாய் நிச்சயம் செய்ததால் மணமுடைந்து பெண் தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் காதலித்து வந்த பெண்ணை தாய்மாமன் மகனுக்கு தாய் நிச்சயம் செய்ததால் மணமுடைந்து பெண் தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனவூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரத்தினம் தம்பதியினரின் மகள் பிரியதர்ஷினி வயது (21)இவர் கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் மங்களம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் மகன் ராஜேஷ்(25) என்பரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் தாய் ரத்தினத்துக்கு தெரிய வர அவருடைய தாய் மாமன் மகன் விஷ்ணு (24) செஞ்சியில் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அவசர அவசரமாக நிச்சியம் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த பிரியதர்ஷினி இவருடைய பெற்றோர்கள் திருப்பத்தூருக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கி வர சென்ற போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் பெற்றோர் வந்து பார்க்கும் போது என் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து கத்தி கதறினர். பின்னர் இந்த சம்பவம் அறிந்த ஏலகிரி மலை போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு பிடித்த பையனை காதலித்து வந்த நிலையில் தாய் மாமன் மகனுக்கு தாய் நிச்சயம் செய்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story