கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வனத்துறை அறிவிப்பு.
Periyakulam King 24x7 |7 Aug 2024 8:33 AM GMT
குளிக்க தடை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இந்த கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரை விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story