கர்ப்பிணி பெண்ணை ஜாதியை காரணம் காட்டி சிகிச்சை அளிக்காமல் அலை கழித்ததாக செவிலியர்கள் மீது உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

கர்ப்பிணி பெண்ணை ஜாதியை காரணம் காட்டி சிகிச்சை அளிக்காமல் அலை கழித்ததாக செவிலியர்கள் மீது  உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு
வெல்லக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க வந்த கர்ப்பிணி பெண்ணை ஜாதியை காரணம் காட்டி சிகிச்சை அளிக்காமல் அலை கழித்ததாக செவிலியர்கள் மீது குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பு உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வெல்லக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க வந்த கர்ப்பிணி பெண்ணை ஜாதியை காரணம் காட்டி சிகிச்சை அளிக்காமல் அலை கழித்ததாக செவிலியர்கள் மீது குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பு உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மனைவி நந்தினி இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது குழந்தை பிரசவத்திற்காக வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக நேற்று காலை 10 மணி அளவில் சேர்ந்தார். அப்போது பணியில் இருந்த செவிலியர்கள் பாக்கியலட்சுமி மற்றும் செந்தமிழ் ஆகியோர் நந்தினி ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் மேலும் நான்காவது குழந்தைக்காக அட்மிட் ஆகியுள்ளார். மேலும் இவருக்கு பிரசவம் பார்த்தால் பணம் ஏதும் கொடுக்க மாட்டார் அதன் காரணமாக ஏதாவது சொல்லி அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த நந்தினி இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் இதுகுறித்து கேட்கும்போது செவிலியர்கள் தட்டிக் கழித்துள்ளனர் அதன் பின்பு நேற்று மாலை 6 மணி அளவில் மாற்று செவிலியர் பணிக்கு கவிதா என்பவர் வந்துள்ளார். அதன் பின்பு பிரசவம் பார்த்த நிலையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ஜாதி பெயரை சொல்லி பேசிய செவிலியர் மீது ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள் இன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் வந்தால் அவரிடம் முறையிடுவோம் எனக்கூறி வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது. இதனை அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story