வெள்ளகோவில் பகுதியில் பாலம் பராமரிப்பு பணி தீவிரம்
Kangeyam King 24x7 |7 Aug 2024 12:18 PM GMT
வெள்ளகோவில் பகுதிகளில் தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு பாலங்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலத்துக்கு முன்பாக நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் மழை வெள்ளம் நீர் தங்கு தடை இன்றி செல்ல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளகோவில் உட்கோட்ட நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட வெள்ளகோவில் புதுப்பை, வெள்ளகோவில் அக்கறைபாளையம், பாறைக்கடை தாசநாயக்கன்பட்டி, அணைப்பாளையம் சாலைகள், முத்தூர் பகுதி வாலிபனங்காடு, குழந்தைபாளையம் மற்றும் கிராம சாலையில் உள்ள 150கும் மேற்பட்ட சிறு,குறு, நடுத்தர பாலங்கள் தூர்வாரப்பட்டு அடைப்புகள் அகற்றப்பட்டு, வெள்ளையடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உட்கோட்ட உதவி பொறியாளர் சத்திய பிரபா தெரிவித்தார்.
Next Story