பண்டுதகாரன்புதூர்- குடும்ப தகராறில் தனியாக வசித்து வந்தவர் வலிப்பு நோயால் உயிரிழப்பு.
Karur King 24x7 |7 Aug 2024 1:11 PM GMT
பண்டுதகாரன்புதூர்- குடும்ப தகராறில் தனியாக வசித்து வந்தவர் வலிப்பு நோயால் உயிரிழப்பு.
பண்டுதகாரன்புதூர்- குடும்ப தகராறில் தனியாக வசித்து வந்தவர் வலிப்பு நோயால் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, பண்டுதாக்காரன் புதூர் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன் வயது 44 .இவரது மனைவி வளர்மதி வயது 37. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் இருவரும் கடந்த 17 வருடங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 மணி அளவில், வெங்கடேஷனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த வெங்கடேசனின் மனைவி வளர்மதி, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த வெங்கடேசனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story